சசிகலாவின் உயிருக்கு ஆபத்து; துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது… திவாகரன்

சசிகலாவின் உயிருக்கு ஆபத்து; துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது… திவாகரன்

எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடந்துவருகிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். தற்போது பணம் எது வரை பாய்ந்தது என்றே தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன். சசிகலாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.

சசிகலாவின் உயிருக்கு ஆபத்து; துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது… திவாகரன்

பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சசிகலா. மூச்சுத் திணறல் அதிகமாக இருந்ததால் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். உடல்நிலை மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளதால், சசிகலா உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார் அவரது தம்பி திவாகரன்.

சசிகலாவின் உயிருக்கு ஆபத்து; துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது… திவாகரன்

அவர் மேலும், சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து வந்துள்ள நிலையில் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர் . அதனால் தான் நிலைமை இப்போது மோசமாகி இருக்கிறது. அவருக்கு சிறையில் கொரோனா ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. இதனால் சசிகலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகம் எழுகிறது என்று தெரிவித்துள்ளார் திவாகரன்.

சசிகலாவின் உயிருக்கு ஆபத்து; துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது… திவாகரன்

பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து செல்லப்பட்ட சசிகலா, சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்துச்செல்லப்பட்ட சசிகலா, பின்னர் நிலைமை மோசமானதும் ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு சென்று, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன் இந்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.