ஓபிஎஸ், எடப்பாடியால் நீக்கப்பட்ட உறுப்பினர்கள் 1,17,000 பேர்!

 
eo

ஒன்றரை கோடி தொண்டர் படையை கொண்டது அதிமுக என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சொல்லி வரும் நிலையில்,  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வத்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே 1,17,000 நபர்கள் என்கிறார் கேசிபி. இருவரின் நடவடிக்கைகள்  பிடிக்காமல் தாமாக கட்சியிலிருந்து  விலகிய உறுப்பினர்களும் பலர்.

k

அதிமுக மொத்தமும் பழனிச்சாமி வசமானதால் பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கினால் இந்த  1,17,000 நபர்கள்  யார் பக்கம் போவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது அதிமுகவினரிடையே.

அண்ணா திமுக என்பது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட வலிமையான கட்சி. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என்பது ஒருபுறமிருக்க இ.பி.எஸ்  & ஓ.பி.எஸ் ஆகிய இருவரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே 1,17,000 நபர்கள், மேலும் இருவரின் நடவடிக்கைகள்  பிடிக்காமல் தாமாக கட்சியிலிருந்து  விலகிய உறுப்பினர்களும் பலர் என்று சொல்லும் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி, தற்போது நிலவும் அசாதரணமான சூழ்நிலையில் ஒன்றுபட்ட அதிமுக என்பது தான் காலத்தின் தேவை என்று அறிவுறுத்துகிறார்!