எடப்பாடி வரைவு செய்த 16 தீர்மானங்கள்! நிராகரிக்கப்பட்ட தீர்மானங்களும் சேர்ப்பு

 
e

வரும் 11ஆம் தேதி கூடவிருக்கும் அதிமுக பொதுக்குழுவிற்காக 16 தீர்மானங்களை வரைவு செய்துள்ளார் எடப்பாடி.   இதில் கடந்த முறை நிராகரிக்கப்பட்ட  தீர்மானங்களில் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளன. 

 கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று நடந்த அதிமுக பொது குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்தன.  ஒற்றைத் தலைமை விவகாரத்தால் இந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவித்தது எடப்பாடி தரப்பு.   மீண்டும் வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூடவிருக்கிறது என்றும் அந்த பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. 

ea

 23 தீர்மானங்களையும் எடப்பாடி திறப்பு நிராகரித்திருக்கும் நிலையில் அன்று நடந்தது பொதுக் குழுவே இல்லை என்கிறது ஓபிஎஸ் தரப்பு.  இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில்  3000 பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு அங்கு பொதுக்குழு கூடுகிறது .

இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப் படுவதற்காக 16 தீர்மானங்களை வரைவு செய்துள்ளார் எடப்பாடி.   கடந்த முறை நிராகரிக்கப்பட்ட தீர்மானங்களில் சிலவும் இந்த தீர்மானங்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்று தகவல் .

பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அழைப்புகள் அனுப்பும் பணியும்  நடந்து வருகிறது.   இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்துவிட்டு பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றி , தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடியை நியமிப்பது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.  

 அதே நேரம் அதிமுகவின் பொருளாளர் ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது அதற்கு தடை வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.