150 கோடியில் செந்தில்பாலாஜி கட்டும் பிரம்மாண்ட பங்களா! அனுமதி இல்லாமல் கட்டுவதாக குற்றச்சாட்டு!

 
se

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,  கரூர் பைபாஸ் சாலையில் 3.5 கிலோ மீட்டர் ஏக்கரில் 150 கோடி ரூபாயில் பங்களா கட்டுகிறார்.   ஆனால் கட்டிடம் கட்ட ஆண்டாள் கோவில் பஞ்சாயத்தில் அனுமதி பெறாமல் கட்டி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

bl

அமைச்ச செந்தில்பாலாஜிக்கு சொந்த ஊர் கரூர்.  இங்கே கரூர் புறவழிச்சாலையில்  அரண்மனை போன்ற பங்களாவை கட்டுகிறார்.  3.5 ஏக்கர் நிலத்தின் பரப்பளவில் இந்த பங்களாவை கட்டுகிறார்.  இதில்  நிலம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.  நிலம் மற்றும் கட்டுமானத்தின் மொத்த மதிப்பு மட்டும் 150 கோடி ரூபாயைத் தாண்டும்.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில்தான் இந்த  சொத்து உள்ளது. அந்த வீட்டிற்கு நிர்மலா இல்லம் என்றுதான் பெயரிடப்பட்டிருக்கிறது.

அமைச்சரின் இந்த பங்களா ஆடம்பரமான முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பளிங்கு கற்கள் மற்றும் பிற உட்புற பாகங்கள் இத்தாலி மற்றும் பல நாடுகளில் இருந்து ஐரோப்பாவிலிருந்தும்  இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த பங்களாவின் கட்டுமானப் பணிகளை வெளியில் இருந்து யாரும் பார்க்க முடியாத வகையில் 12 அடி உயரத்தில் சுற்றுச்சுவரைச் சுற்றி ஷீட்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று சொல்லும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்,



வெறும் 66.5 கோடி ரூபாய் சொத்துக்களுக்காக ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  ஆனால் இங்கே 150 கோடி ரூபாயில் பங்களா கட்டுகிறார் செந்தில்பாலாஜி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேநேரம் இந்த பங்களா அனுமதி வாங்காமல் கட்டப்படுகிறது என்பதையும்,  ‘’கட்டிடம் கட்டுனா அனுமதி வாங்கணும்ல. வாங்கலையா அண்ணே ’’ என்று கேட்கிறார் சவுக்கு சங்கர்.

’’ஐரோப்பிய நாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்டு, தமிழகத்தின் அடையாளமாக மாற இருக்கும் "நிர்மலா இல்லம்" இதுதான்.  திறப்பு விழாவிற்கு முன்னர் மக்கள் பார்வைக்கு 1 வாரம் அனுமதித்தால் ஏழை மக்களுக்கு காணக் கிடைக்காத அனுபவமாக இருக்கும். அனுமதி கிடைக்குமா?’’ என்று கேட்கிறார் அதிமுக ஐடி விங்க் நிர்வாகி. 

அதற்கு சவுக்கு சங்கர்,   ‘’நம்ப அண்ணன் சார் செந்தில் பாலாஜி.  சொன்னா சுத்திக் காட்டுவாரு.’’என்கிறார்.