இபிஎஸ்க்கு 15 , ஓபிஎஸ்க்கு 8 :பாஜக கூட்டணி பேச்சு

 
ம்m

 பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவை தவிர்த்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால் அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும்.  அதனால் அனைவரும் சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும் என்கிறது பாஜக.  ஆனால் இவர்களை சேர்த்துக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிறது பழனிச்சாமி தரப்பு.

 இந்த நிலையில் தனது ஆதரவை காட்ட இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தினை கூட்டி இருக்கிறார் ஓபிஎஸ்.  இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து,  ஓபிஎஸ் க்கு பாஜக அளிக்கப் போகும் முன்னுரிமையை பொறுத்து அடுத்து 27ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனது  முடிவை அறிவிக்க போகிறார் பழனிச்சாமி.

ட்

 இதற்கிடையில் பழனிச்சாமி தரப்பில் அவரின் முக்கிய ஆதரவாளர்களான இரண்டு முன்னாள் அமைச்சர்களிடம் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறார்கள் என்று தகவல்கள் பரவுகின்றன. 

 ஓபிஎஸ் உடன் இணைந்து தேர்தலை சந்திப்பதாக இருந்தால் பாஜகவுக்கு 10 தொகுதிகளே போதும் . மிச்சம் உள்ள தொகுதிகளில் அதிமுகவும் கூட்டணி கட்சிகளும் போட்டியிடலாம்.   அப்படி இல்லை என்றால்  அதிமுகவுக்கு 15 தொகுதிகள் கொடுக்கப்படும்.  அதில் பழனிச்சாமி அணி போட்டியிடலாம்.  மிச்சமுள்ள 25 தொகுதிகளில் ஓபிஎஸ் அணிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்படும்.  அவர் அணியினர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள்.  அதன் பிறகு பாமக, அமமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு மிச்சம் உள்ள தொகுதிகளில் பாஜக போட்டியிடும் .

இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம்  முடக்கப்பட்டு விடும் அபாயம் இருக்கிறது.  அப்புறம் எல்லாருக்குமே பாதிப்பு ஏற்படும் என்று பேச்சு நடந்திருக்கிறது . இதில்,  பழனிச்சாமி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது வரும் 27ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர்தான் தெரிய வரும் என்கிறார்கள்.