மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.. காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி

 
காங்கிரஸ்

மேகாலயாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர்  திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இது காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தனது மற்ற மாநிலங்களிலும் காலூன்ற விரும்புகிறது மற்றும் தேசிய அரசியலிலும் நுழையும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக முதலில் திரிபுரா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களை திரிணாமுல் காங்கிரஸ் தன் பக்கம் இழுத்து வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ்

மேகாலயாவில் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு மொத்தம் 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் முன்னாள் முதல்வர் முகுல் சங்கா உள்பட  மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்.காங்கிரசின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவியதால், அந்த மாநிலத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

முகுல் சங்மா

மேகாலயாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவியது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் உட்கட்சி பூசலை தீர்க்காதவரை கட்சியிலிருந்து பல தலைவர்கள் மாற்று கட்சிக்கு செல்வதை தடுக்க முடியாது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.