அதிகம் மது குடிப்பவர்களின் மனைவியருக்கே 1,000 ரூபாய் வழங்குவதில் முன்னுரிமையா? வானதி சீனிவாசன் வாதம்

 
r

அதிகம் மது குடிப்பவர்களின் மனைவியருக்கே 1,000 ரூபாய் வழங்குவதில் முன்னுரிமை வழங்கலாம் என்று வானதி சீனிவாசன் சட்டசபை விவாதத்தின் போது  வாதம் செய்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  அந்த தேர்தலில் இந்த வாக்குறுதியின் காரணமாகவே திமுக வெற்றி பெற்றது என்ற பேச்சு இருக்கிறது.  ஆனால் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இரண்டு வருடங்கள் ஆன பின்னரும் கூட இன்னமும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை.  இனிமேல்தான் அந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. 

se

 அதுவும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்காமல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.   இதை ஏன் தேர்தல் பிரச்சாரத்திலேயே சொல்லவில்லை . அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவியருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் என்றால் என்ன என்பது குறித்து பலரும் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.  

v

 இதனால் ஆத்திரப்பட்ட அரசு பலரையும் கைது செய்து வருகிறது.   இந்த நிலையில் இது தொடர்பாக சட்டமன்றத்தில் நேற்று விவாதம் நடந்தது.  அப்போது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்,   தகுதி வாய்ந்த குடும்பத் தலைவியருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக்கில் மது  வாங்குவதற்கு ஆதார் எண்ணெய் கட்டாயமாக்க வேண்டும்.  அதன் வாயிலாக அதிகம் மது குடிப்பவர்களை கணக்கிட்டு அவர்களின் மனைவியருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கலாம் என்றார்.  மேலும்,   தமிழகத்தில் தான் அதிகமான இளம் விதவையர் உள்ளனர்.  இதற்கு மது கடைகளை காரணம் என்று அவர் வாதத்தை எடுத்து வைக்க,

 இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி ,   தமிழகத்தில் மட்டுமல்ல பாஜக ஆளும் கர்நாடகா,  உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் மது விற்பனையால் அரசுக்கு வருமானம் வருகிறது.  தமிழகத்தில் மதுவிற்பனை அதிகரித்து இருப்பதற்கு விலை உயர்வு காரணம் என்று அவர் விளக்கமளித்திருக்கிறார்.