ஓபிஎஸ், சசிகலா பின்னால் அணி திரளும் 100 தேவர் சங்கங்கள் - 50 சங்கங்கள் ரகசிய கடிதம்

 
so

 அதிமுகவில் இருந்து சசிகலாவையும் , ஓ. பன்னீர் செல்வத்தையும் எடப்பாடி பழனிச்சாமி நீக்கியதால் தேவர் சமூக அமைப்புகள் கடும் கொந்தளிப்பில் உள்ளன.  சாதி ரீதியாக தங்கள் இனத்தைச் சேர்ந்தவருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றே அவர்கள் கருதுகிறார்கள்.   பொதுக்குழுவில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்ட போதும் தேவர் சமூக அமைப்புகள் பொங்கி வெடித்திருக்கின்றன.

 சசிகலா தேவர் உட்பிரிவான கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.  ஓபிஎஸ் தேவர் உட்பிரிவான மறவர் சமூகத்தை சேர்ந்தவர்.  இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட தேவர் சமூக அமைப்புகள் ஓபிஎஸ் பின்னாலும், சசிகலா பின்னாலும் அணி திரண்டு இருக்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வம் , சசிகலாவும் இணைந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட தேவர் சமுதாய அமைப்புகள் ஓபிஎஸ்சிக்கும் சசிகலாவுக்கும் ரகசிய கடிதம் எழுதி இருக்கிறார்கள். 

os

 அந்த கடிதத்தில் சாதிய சாதியின் நிறத்தை வெளிப்படையாக காட்டி போட்டியாளரை தோற்கடிக்க வேண்டும்.   நமது போட்டியாளர்கள் நமது துரோகிகளை பயன்படுத்தி நம்மை அழிக்க பார்க்கிறார்கள் .  பொதுச் செயலாளராகவும் , ஒருங்கிணைப்பாளராகவும் கைகோர்த்து கட்சியை கைப்பற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.   ஜெயலலிதாவின் சகோதரியான சசிகலாவும்,  ஜெயலலிதாவுக்க்கு மிகவும் நம்பிக்கையாக இருந்த ஓபிஎஸ்சும்  ஒன்று சேர்ந்து சேர வேண்டும். இதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும்,     இருவரும் இணைந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம், மருதுபாண்டியர் ராஜராஜ சோழன் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்துங்கள். உங்களுக்கு போட்டியாக யாரும் இங்கே வர முடியாது . நாகப்பட்டினத்தில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூர், வேலூர் வரை பிரச்சாரத்தை தொடங்குங்கள் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.