தமிழக அரசியல்வாதிகள் ஊழல்வாதி என கிரண்பேடி சொன்னதை சட்டமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது- நாராயண சாமி

 

தமிழக அரசியல்வாதிகள் ஊழல்வாதி என கிரண்பேடி சொன்னதை சட்டமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது- நாராயண சாமி

தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல் வாதிகள் என்று சொல்லியதை தமிழக சட்டமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல் வாதிகள் என்று சொல்லியதை தமிழக சட்டமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

சட்டமன்றத்தில் சபாநாயகர் இதுபற்றி விவாதம் வைக்கவேண்டும். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு ராகுல்காந்தி மட்டும் காரணம் அல்ல. நிர்வாகிகளும் தொண்டர்களும் தான் காரணம். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியே நீடிக்க வேண்டும் என்று நேற்றைய தினம் கேட்டுக்கொண்டோம். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தமிழக மக்களை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்களை ஊழல்வாதி என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. இப்படி தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு தனக்கு விளம்பரம் வேண்டும் என்றும் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். எங்களுக்கு தொல்லைகொடுத்து கொண்டிருந்த கிரண்பேடி தற்போது தமிழகத்தில் வாலை நீட்ட தொடங்கியுள்ளார். அவர் துணை நிலை ஆளுநராக இருக்க தகுதி இல்லாதவர். தரம் தாழ்ந்து பேசுகிறார், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார், விளம்பரத்திற்காக பேசுகிறார்.

தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என்று சொல்லியதை தமிழக சட்டமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் சபாநாயகர் இதுபற்றி விவாதம் வைக்கவேண்டும். தமிழக சட்டமன்றமானது ஊழல்வாதி என்று சொன்னதை ஏற்றுக்கொள்கிறார்களா? இது தமிழ் சமுதாயத்திற்கே பெரும் அவமதிப்பை ஏற்படுத்துகிறது. கிரண்பேடி சொன்னதற்காக புதுச்சேரி மக்கள் சார்பாக அவர் செய்த தவறை தமிழக மக்கள் மன்னிக்க வேண்டும்” என்று கூறினார்.