வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு ரூ.7,500 கொடுங்க… மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

 

வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு ரூ.7,500 கொடுங்க… மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

நாட்டில் பட்டினி சாவு இல்லை என்பதை உறுதி செய்ய, வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு ரூ.7,500 கொடுங்க என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி Peoples Democracy பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரிசோதனையில் உலக நாடுகளில் இந்தியா பின்தங்கி உள்ளது. பரிசோதனைகளை வேகப்படுத்த வேண்டும். தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவீதம் என்ற அளவில் உள்ள நிதி ஊக்குவிப்பு தொகுப்பை குறைந்தபட்சம் 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.

நிதி உதவி

மாநிலங்களுக்கு தாராளமய நிதி வழங்க வேண்டும். நம் நாட்டில் பட்டினி சாவு இல்லை என்பதை நாம் கட்டாயம உறுதிப்படுத்த வேண்டும். ஆகையால், வருமான வரி செலுத்தாத குடுமபங்களுக்கு உடனடியாக அருட்கொடையாக ரூ.7,500 வழங்க வேண்டும். மேலும் தேவைப்படும் மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்க வேண்டும்.

சீதராராம் யெச்சூரி

எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ. பணியாளர்களுக்கு வேலைகளை பொருட்படுத்தாமல் அவர்களு்ககு சம்பளம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வேலை இழப்பு மற்றும் சம்பள குறைப்பு ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க நிறுவனங்கள் நிதி உதவி செய்ய வேண்டும். வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லவும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.