ம.நீ. ம. பத்மபிரியா திமுகவில் இணைந்தார்

 

ம.நீ. ம. பத்மபிரியா திமுகவில் இணைந்தார்

மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகிய பத்மபிரியா சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ம.நீ. ம. பத்மபிரியா திமுகவில் இணைந்தார்

நடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா தான், இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இளம் வேட்பாளார் ஆவார். இந்த தேர்தலில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் என்பதால் அவர் மீது அதிக கவனம் இருந்தது.

பத்மபிரியா மதுரவாயல் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்துவந்தார். ஆனாலும் அவர் தோல்வி அடைந்தார். மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்கள் அனைவருமே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தனர்.

ம.நீ. ம. பத்மபிரியா திமுகவில் இணைந்தார்

தேர்தல் தோல்வி குறித்து கட்சிக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்டன. பல்வேறு நிர்வாகிகள் கமல்ஹாசன் மீது குற்றம் சாட்டி மக்கள் நீதி மையத்தில் இருந்து வெளியேறினர். அதில் ஒருவர் பத்மபிரியா.

மக்கள் நீதி மையத்தின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரனும் கமல்ஹாசன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியேறினார். அவர் இன்று திமுக தலைவர் மு .க ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அவருடன் மக்கள் நீதி மையத்தில் இருந்து வெளியேறிய ஏராளமான நிர்வாகிகள் திமுகவில் இணைந்து உள்ளனர். அதில் பத்மபிரியா குறிப்பிடத்தக்கவர்.