நடுக்கடலில் பேனாவா? கொந்தளிக்கும் அர்ஜூன் சம்பத்

 
ar

 நடுக்கடலில் திமுக அரசு அமைக்க இருக்கும் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் அர்ஜுன் சம்பத்.  

 மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் அவருக்கு மெரினாவில்  நினைவிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.  அது மட்டுமல்லாமல் நடுக்கடலில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  

 கன்னியாகுமரி  கடலில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை அமைத்தார் கருணாநிதி. ஆனால் அதைவிட ஒரு அடி உயரமாக சென்னை மெரினாவில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க முதல்வர் ஸ்டாலின் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் .

as

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பல்வேறு தரப்பினரும் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.  

 சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை போற்றும் வகையில் அவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தும் வந்தே மாதரம் யாத்திரை இந்து மக்கள் கட்சி சார்பில் ஜூலை 15 ல் தொடங்கியது வேலூரில் இந்த யாத்திரை தொடங்கியது.  இதை முன்னிட்டு விருதுநகரில் காமராஜர் இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அர்ஜுன் சம்பத் .  

p

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   ’’வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வு என்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அவரின் சமாதி அருகே பேனா நினைவுச் சின்னம் அமைப்பது எல்லாம் தேவையற்ற ஒன்று.   அவ்வாறு அமைக்க முயன்றால் இந்து மக்கள் கட்சி போராட்டத்தில் ஈடுபடும்’’ என்று எச்சரித்துள்ளார். 

இன்றைக்கு மு .க ஸ்டாலின் அவரது அப்பாவுக்கு நடுக்கடலில் பேனா வைக்கிறார் .  அப்புறம் அதன் கீழே ஒரு நோட்டு வைப்பார்.   அடுத்து உதயநிதி ஸ்டாலின் முதல்வரானதும் எங்க அப்பா விக் வைத்திருந்தார் என்று சொல்லி ஸ்டாலினுக்கு நடுக்கடலில் விக்  வைப்பாரா? இதெல்லாம் கொழுப்பு? இதெல்லாம் தேவையில்லாத சேட்டை? அப்படி ஒன்றும் நடக்க நடக்காது நடக்கவும் நான் விடமாட்டேன் என்று  சீமான் கடுமையாக எச்சரித்து இருந்த நிலையில்,  அர்ஜுன் சம்பத்தும் கடும் எதிர்ப்பை காட்டி இருக்கிறார்.