தமிழகத்தில் கொரோனா கண்டறியும் பணி 95 சதவிகிதம் நிறைவு! – அமைச்சர் வேலுமணி தகவல்

 

தமிழகத்தில் கொரோனா கண்டறியும் பணி 95 சதவிகிதம் நிறைவு! – அமைச்சர் வேலுமணி தகவல்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார்.

தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று கொரோனா பாதிப்பைக் கண்டறியும் பணி 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது என்று அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று கொரோனா அறிகுறிகள் சோதனை செய்யும் பணி 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் 66.347 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

sp-velumani-89

சென்னையில் கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

sp-velumani-78

பொது மக்கள் காய்கறி வாங்க வெளியே வருவதைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 7497 நடமாடும் காய்கறி விநியோக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 582 இடங்களில் பொது உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டு 8.33 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர அம்மா உணவகங்கள் மூலம் 6.25 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.