சுற்றிவளைத்து உதயநிதிக்கு வாழ்த்து சொல்லும் காயத்ரி ரகுராம்
சென்னை ஓட்டலில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து ஆலோசனை நடத்தினார் காயத்ரி ரகுராம், துபாய் ஓட்டலில் திமுக பிரமுகர் ஒருவரை சந்தித்தார் காயத்ரி ரகுராம், அமெரிக்காவில் திமுக பிரமுகர் ஒருவரை சந்தித்தார் காயத்ரி ரகுராம் என்று பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டே வருகின்றனர்.
இதனால் காயத்ரி ரகுராம் திமுகவுக்கு தாவ இருக்கிறார் என்று தான் பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சாட்சி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், பாஜகவினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் மறுத்து வருகிறார் காயத்ரி.
ஆனாலும் பாஜகவினரின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக திமுக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறார். அது மரியாதை நிமித்தம் என்கிறார் . இந்த நிலையில் இன்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
’’குத்துச்சண்டை வீரர்கள் சண்டைக்கு முன் கையுறைகளைத் தொடுவது "நான் உன்னை மதிக்கிறேன், இது தனிப்பட்ட வெறுப்பு இல்லை, சண்டையின் போது நான் விளையாட்டு வீரராக மட்டுமே இருப்பேன்" என்று பார்க்கிறேன். சண்டை முடிந்ததும், இரண்டு போராளிகள் ஒரே மாதிரியாக சாதாரண மனிதராக வாழ்கின்றனர்.ஆனால் அவர்கள் இறுதிவரை போராடுகிறார்கள். சிறந்த ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். இரண்டு போராளிகள் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுவதற்கான பொதுவான வழியாகும். இது ஆரோக்கியமான குத்துச்சண்டை. அந்த குறிப்பில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கு வாழ்த்துகள்’’என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால் அவரை, எப்போது திமுகவில் பார்க்கலாம்? என்று கேட்கின்றனர். எதற்கு சுற்றி வளைத்துக் கொண்டு இப்படி பாராட்டு தெரிவிக்க வேண்டும். திமுகவுக்கு சென்று விட்டதாக முத்திரை குத்தி விட்டார்கள். அதனால் நேரடியாகவே உதயநிதிக்கு வாழ்த்து சொல்லி விடலாமே என்று பாஜகவினர் கருத்து கூறி வருகின்றனர்.
அதே குத்துச்சண்டையிலதான் எதிரி மூக்க உடைக்கிறது, காதை கடிச்சு துப்புறதெல்லாம் நடக்குது. அதனால கவனமா இருக்கனும்.கால்பந்து விளையாடும்போது குத்துச்சண்டைய நினைச்சுகிட்டு சேம் சைட் கோல போட்டு நம்ம டீம நம்மளே கவுக்கபடாது. நம்ம டீமோட இணக்கமா இருக்க கத்துக்கனும். முதல்ல கேப்டன மதிக்கணும் என்கிறார்கள்.