கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு

 
an

கொலை முயற்சி வழக்கில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார்.   தூத்துக்குடியில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரி முன்னாள் நகர திமுக செயலாளராக இருந்தவர் சுரேஷ்.  இவரை கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த உட்கட்சி மோதலில் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர்.   மேலும் சுரேஷின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தி வெடிகுண்டுகளும் வீசப்பட்டன .

an

இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில்,  சுரேஷ் உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில்  கைது செய்யப்பட்ட சுரேஷ்,  அனிதா ராதாகிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில்தான் சசிகுமார் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அதனால் சசிகுமாரை கொலை செய்ததாகவும் வாக்கு மூலம் அளித்து இருக்கிறார்.   

இதை அடுத்து கொலை செய்ய தூண்டியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.   இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில் கொலை முயற்சி தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை இந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.