எங்கள் தரப்புக்கு சாவி கிடைத்து விடும் - ஓபிஎஸ் வழக்கறிஞர் நம்பிக்கை

 
ஓ

நியாயமாகப் பார்த்தால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கை அரசே ஏற்று நடத்தி இருக்க வேண்டும்.  எடப்பாடி பழனிச்சாமி கையில் சாவி சென்றது நியாயம் இல்லை.   இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போகிறோம்.  எங்கள் தரப்புக்கு  நிச்சயம் சாவி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் சொல்லுகிறார் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன்.

 கடந்த 11 ஆம் தேதி அன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த  மோதல் கலவரமாக மாறியது.   இதனால் அதிமுக அலுவலகத்திற்கு அரசு சீல் வைத்தது அரசு.   இந்த சீலை அகற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி , இபிஎஸ் இருவருமே மனுதாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி கையில் சாவி ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு இட்டது.

ஓ

 இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார் ஓபிஎஸ்.   இது குறித்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன்,    அதிமுக அலுவலகத்தின் முன்பாக நடந்த கலவரத்திற்கு முன்பாக காலையில் எட்டு முப்பது மணிக்கு வீட்டில் இருந்து ஓபிஎஸ் புறப்படும் போது அவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்.  எதிர் தரப்பினரின் வாதத்தின்படியே வைத்துக் கொண்டாலும் கூட அப்போது அவர் பொருளாளர். 

 அப்படி இருக்கும்போது தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் செல்வதில் எந்த தவறும் இல்லை.   நியாயமாக பார்த்தால் இந்த வழக்கை அரசு ஏற்று நடத்தி இருக்க வேண்டும்.   எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்கவில்லை.   ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓபிஎஸ் க்கு தான் சாவி கிடைத்திருக்க வேண்டும்.   ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்துவிட்டது.   இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் நிச்சயம் சாவி எங்களுக்கு கிடைத்துவிடும் என்கிறார் நம்பிக்கையுடன்.