அமைச்சர் நாசர் மகனுக்கு இந்த திமிர் எங்கிருந்து வந்தது? பாஜக ஆவேசம்

 
naa

தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட  திமுக ஆவடி மாநகரச் செயலாளராக உள்ளார். இவர் மீது தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டினை முன் வைத்திருக்கிறார்.

aa

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் உருவப்படங்களை   திமுகவை சேர்ந்த கும்பல் ஒன்று அமைச்சர் நாசர் அவர்களின் மகன் தலைமையில் சென்று அகற்றியுள்ளது  வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார். 

இது குறித்து பாஜக  திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர்  அஸ்வின் அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சார்பதிவாளர் அலுவலகத்தில் இது குறித்து விசாரித்த போது திமுக குண்டர்களால் அந்த அலுவலக பணியாளர்கள் மிரட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. 

na

பிரதமர்  மற்றும் குடியரசு தலைவர் படங்களை அகற்றும் அகம்பாவம், ஆணவம், திமிர் எங்கிருந்து வந்தது? இந்த குண்டர்களை தமிழக காவல்துறை உடன் கைது செய்ய 
 மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.