‘உ.பி சம்பவத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது’ – தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

‘உ.பி சம்பவத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது’ – தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

உ.பி சம்பவத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்று தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

‘உ.பி சம்பவத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது’ – தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன், ‘உத்தரபிரதேசம் ஹத்ராஸில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை வைத்து அரசியல் செய்யக்கூடாது; சில நிகழ்வுகளை வைத்து ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கையும் குறை சொல்லக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

‘உ.பி சம்பவத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது’ – தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

ஹத்ராஸ் இளம்பெண்ணின் உடலை அவரது பெற்றோரின் அனுமதி இல்லாமல் நள்ளிரவில் போலீஸார் தகனம் செய்ததாக கூறபடுகிறது. இந்த சம்பவம் குறித்து எஸ்ஐடி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது