• May
    22
    Wednesday

Main Area


செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி மட்டும் ஜெயிக்கட்டும்... அப்புறம் இருக்கு அரவக்குறிச்சியில் கச்சேரி...அதிமுக போடும் அசத்தல் ப்ளான்..!

நடைபெற்று வரும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கடும் டஃப் கொடுக்கும் தொகுதி அரவக்குறிச்சி. செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகமும், பணபலமும் அதிமுகவையும், அமமுகவை...


 CM Palanisamy

ஸ்டாலின் என்ன 25 வயசு இளைஞனா? கறுத்துவிட்டேன் என சொல்வதற்கு... விளாசிய முதல்வர்

திமுக தலைவர் ஸ்டாலின், 25 வயது இளைஞர் போல செல்லும் இடங்களிலெல்லாம் நான் கறுத்துப்போய்விட்டேன், நான் கறுத்திப்போய்விட்டேன் என உளறிவருகிறார் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்....

கூட்டணிக்கு வேட்டு வைத்த பாமக... அலறித் துடிக்கும் அதிமுக..!

மக்களவை தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைத்தது உள்ளாட்சித் தேர்தலில் வேட்டு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக.

இந்தத் தேர்தலில் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது அதிமுக. ஆனால் பிரச்சாரத்தின் போது இந்தக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட ஈகோ மோதல், உள்குத்து எல்லாம் இப்போது தான் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கூட்டணிக்கே வேட்டு வைக்க ஆரம்பித்துள்ளது. ராமதாஸ்

ஆகையால் கூட்டணி இன்றி தனித்தே போட்டியிட்டு இருக்கலாம் என அதிமுக நிர்வாகிகள் சிலரும் தொண்டர்களும் புலம்பி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுகவினர் தேர்தலுக்கு முன்னர் உற்சாகத்தில் இருந்தனர். அங்கு அதிமுக சிட்டிங் எம்பி அரிக்கோ, அதிமுகவினருக்கோ அரக்கோணம் தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கூட்டணிக் கட்சியான  பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்திக்கு அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்தது அதிமுக. ராமதாஸ்

ஒருமுறை பாமக கூட்டணியில் சேர்ந்தபோது, அரக்கோணம் தொகுதியில் பாமகவிற்கு தேர்தல் பணியில் முழுமூச்சாக வேலை செய்தும், தேர்தலில் தோற்று போனவுடன், அதிமுக தான் தோல்விக்கு காரணம் என்று பாமகவினர் அந்தர்பல்டி அடித்தனர். 

இந்நிலையில் தற்போது நடந்த மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆற்காடு நகரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அப்போது வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியின் உறவினர் மற்றும் நண்பர்களே பட்டுவாடா செய்துள்ளனர். கூட்டணி கட்சியை நம்பாமல், பாமகவினரே பணத்தை பட்டுவாடா செய்ததால், அதிமுகவினர் தேர்தல் முடிந்தும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.  ராமதாஸ்

இப்படி கூட்டணி கட்சியையே நம்பாதவர்களுடன் கூட்டு வைக்காமல், ஜெயலலிதா பாணியில் தனித்தே போட்டியிட்டிருக்கலாம். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது எப்படி இந்த எதிர்ப்புகளை எல்லாம் நாங்க சமாளிக்க போகிறோமோ? இதெல்லாம் நமக்கு தேவையா என்று ஆற்காடு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் புலம்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்.  
 

Thijai Sat, 05/11/2019 - 10:07
ramadoss pmk admk edappadipalanisamy எடப்பாடி பழனிசாமி அரசியல்

English Title

To the coalition, the massacre PMK... the laughing AIADMK

News Order

0

Ticker

1 எப்படி இருந்த கேப்டன் இப்படி ஆயிட்டாரே... பரிதாபத்தில் விஜயகாந்த்..!

எழுந்தால் சிங்கம் இளைத்தால் பூனை என்கிற கதையாகி விட்டது விஜயகாந்தின் நிலைமை. அவரது உடல் நலத்தை போலவே கட்சியில் நலமும் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. premalatha

அதற்கு சமீபத்திய உதாரணம் இந்த சம்பவம்... ‘‘தேனி தேமுதிக மாவட்ட செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.  இவர் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாகவும், நிர்வாகிகளை மதிக்காமல், அவர்களை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. ‘நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட தங்கள் தரப்பிடம் ஆலோசனை கேட்கவில்லை. கட்சி செலவுக்கு கூட பணம் தரவில்லை. இவரை உடனே மாற்ற வேண்டும்’ என தங்களது உள்ளக் குமுறல்களை நிர்வாகிகளும், தொண்டர்களும் மனுக்களாக, கட்சித் தலைவர் விஜயகாந்திற்கும், அவரது மனைவி பிரேமலதாவிற்கும் அனுப்பி வருகிறார்கள். vijayakanth

 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளின் கடிதத்தை பார்த்த கட்சி தலைமை குழப்பத்தில் இருக்கிறது. காரணம் ஏற்கனவே இருக்கிறவர்களை தக்க வைக்கவே படாதபாடாக இருக்கிறது. ஏற்கெனவே பலரும் கொத்து கொத்தாக கட்சி தாவி போய் விட்டார்கள். இப்போது மாவட்ட செயலாளர் மீதும்  நடவடிக்கை எடுத்து, அவர் உட்பட ஆதரவாளர்கள் மொத்தமாக வேறு கட்சிக்கு தாவினால் என்ன செய்வது?  தேர்தல் முடியட்டும். ரிசல்ட்டை பார்த்து விட்டு முடிவு எடுப்போம்.  இப்போது ஏதாவது நடவடிக்கை எடுத்தால் கூட்டணியை பாதிக்கும். அதுவரை பொறுமையாக அனுசரித்துக் கொள்ளுங்கள்’’ என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்கள். vijayakanth

சட்டசபைக்குள் முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே நாக்கை துருத்தி அடிக்கப்பாய்ந்த தைரியசாலி விஜயகாந்த் இப்போது ஒரு மாவட்டச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் பம்மும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாரே என புலம்பி வருகின்றனர் தேமுதிக தொண்டர்கள்.

Thijai Sat, 05/11/2019 - 09:42
vijayakanth premalatha dmdk விஜயகாந்த் அரசியல்

English Title

How was the captain who was like thisvijayakanth in pity

News Order

0

Ticker

1 
டி.டி.வி.தினகரன்

ஓ.பி.எஸை நம்பி நொந்து நூடுல்ஸான நிர்வாகிகள்... டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவ அதிரடி முடிவு..!

அதிர்ச்சியான அவர், தேர்தல் பணிகளை புறக்கணித்து விட்டார். அவரை சமாதானப்படுத்த, அதிமுகவினரும், தங்கள் பக்கம் இழுக்க, அமமுகவினரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.


வசீம் ரிஷ்வி

மோடி பிரதமாராகாவிட்டால் ராமர் கோவிலில் தற்கொலை செய்துகொள்வேன்’...இதென்னய்யா புது ட்ரெண்டு...

நரேந்திரமோடி இந்தத் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராகவிட்டால் தாம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் வாசல் முன்பு அமர்ந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஒருவர் ...

இதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்

கோவை :

கோவையில் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று கோவை செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுமி கொலை 

கோவையில் தன் வீட்டின் அருகிலேயே சடலமாக மீட்கப்பட்ட  7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் இந்த சம்பவம் கோவை மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

கோவை வழக்கு

ஏற்கனவே, கோவையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் செய்து தரும் என அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆறுதல் சொல்ல செல்லும் கமல் 

இன்று தான் இறந்த குழந்தையின் உடற்கூறாய்வு முடிவுகள் வெளி வந்து அதில் அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளார் என்பது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்

இதற்காக மத்திய மற்றும் வடசென்னை பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்ய இருந்த கமல், அதை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்ல இருக்கிறாராம். பிற்பகல் 2 மணியளவில் கோவை செல்ல இருக்கும் கமலஹாசனுடன் வழக்கறிஞர் ஒருவரும் செல்ல இருப்பதாகத் தெரிகிறது.

 

இதையும் படிங்க 

டோக்கன் கொடுத்து ஏமாற்றியது போல் பரிசு கொடுத்து ஏமாற்ற முடியாது: டி.டி.வி.யை விமர்சித்த அ.தி.மு.க அமைச்சர்

 

mithra Fri, 03/29/2019 - 12:58
kamal kamalhassan, makkal needhi maiam, kamal, covai rape victim கமலஹாசன் அரசியல் தமிழகம்

English Title

kamal goes covai join hands with rape victims parents

News Order

0

Ticker

0 பொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விஐபி தொகுதி 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், திமுக சார்பாக கனிமொழி மற்றும் பாஜக சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் நேரடியாக மோதும் தூத்துக்குடி தொகுதி இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுகிறது.

தமிழிசை

இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்த கனிமொழி முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் களமிறங்க இருப்பதால் வெற்றி பெரும் முனைப்பில் இருக்கிறார். தமிழிசையும் தாமரையை மலர வைத்தே தீர வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார். இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவமும் சேர்ந்து தூத்துக்குடியை ஹாட் தொகுதியாக மாற்றி இருக்கின்றன.

கனிமொழி பொய் சொல்கிறார் 
கனிமொழி

இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் தமிழிசை, " திமுக வேட்பாளர் கனிமொழி பொய் தகவல்களைக் கூறி பரப்புரை செய்து வருவதாக கூறினார். மேலும், பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். அதோடு,திமுக தலைவர் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்றும், அதைப்போல அவர் பரிந்துரைக்கும் ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது என்றும் குறிப்பிட்டார்.

 

இதையும் படிங்க 

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: டிசர்ட்டில் அழகிரி, ஆனாலும் ஸ்டாலினுடன் செல்பி எடுத்த இளைஞர்; வைரல் போட்டோ!

mithra Fri, 03/29/2019 - 11:57
Election lok sabha election 2019 tamilisai soundararajan Kanimozhi Thoothukudi தூத்துக்குடி தொகுதி தேர்தல் களம் தேர்தல் செய்திகள் அரசியல் தமிழகம்

English Title

tamilisai soundhararajan condemns kanimozhi thoothukudi constitution

News Order

0

Ticker

0 இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகும் - வாபஸ் பெற இன்று கடைசி நாள்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.

வேட்புமனுக்கள் பரிசீலனை

தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நிறைவடைந்துள்ளது.

தேர்தல்

தமிழகத்தில் வரும் 18 - ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி, 26 ஆம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன் தினம் நடைபெற்றது. அதில் விதிமுறைகளுக்குட்படாத  வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வாபஸ் பெற நாளை கடைசி நாள் 

வேட்புமனுக்கள் பரிசீலனையின் முடிவில், நாடாளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,587 வேட்புமனுக்களில், 655 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 518 வேட்புமனுக்களில் 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

தேர்தல்

இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று இறுதி நாளாகும். வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளவர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குள் வழக்குகளை வாபஸ் பெறலாம் என்றும் பிற்பகல் 3 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க 

குக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது..! இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்

mithra Fri, 03/29/2019 - 10:06
Election lok sabha election 2019 final candidates election commision வேட்பாளர் பட்டியல் தேர்தல் களம் தேர்தல் செய்திகள் அரசியல் தமிழகம்

English Title

election commision today will announce the final list of lok sabha candidates

News Order

0

Ticker

0 மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை - விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'மிஷன் சக்தி' சோதனை

மக்களவைத் தேர்தல் வரும் 11 -ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமலில் இருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவிக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மோடி

பிரதமர் மோடி அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் 'மிஷன் சக்தி' சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாகத் தெரிவித்தார்.

விதிமுறைகள் மீறப்பட்டதா ?

ஆனால் தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.

மோடி

இந்நிலையில் மிஷன் சக்தி திட்டம் பற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் உரை குறித்து தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. இந்த உரை மூலம் பிரதமர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி விட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால்  இந்திய தேர்தல் ஆணையம் 'மிஷன் சக்தி' குறித்த பிரதமர் மோடியின் பேச்சு தேர்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின் உரை குறித்து பதிலளிக்க தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க 

காலி சேர்களை போட்டோ எடுத்தால் பத்திரிகையாளரா இருந்தாலும் அடிப்போம்: பாஜகவினர் கோபம்?!

mithra Fri, 03/29/2019 - 09:35
Modi Mission Shakti Election Loksabha Elections 2019 மோடி அரசியல் இந்தியா

English Title

election commission demands explanation about modi's speech about mission sakthi

News Order

0

Ticker

0 குக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது..! இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னமாக  'பரிசுப் பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குக்கர் சின்னம் 

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.ம.மு.க என தனி அமைப்பைத் துவங்கி நடத்தி வரும் டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து, அவரின் ஆதரவாளர்கள், வரும் மக்களவை தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் களம் காண்கின்றனர்.

டிடிவி

இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால், தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் அனைவருக்கும் பொதுவான சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி, தினகரன் சார்பில் கோரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், இதுகுறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று 300 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

பொதுச்சின்னம் ஒதுக்கியது 

அ.ம.மு.க-விற்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தினகரன் தொடர்ந்த வழக்கில், அதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஆனால், ஏதாவது ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த நிலையில், அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை நிராகரித்த தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை வழங்கியுள்ளது.

டிடிவி

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னமாக  'பரிசுப் பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் ஒரே சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இதையும் படிங்க 

மக்களவை தேர்தலில் சரிதா நாயர் போட்டி; கேரள அரசியலில் பரபரப்பு!

mithra Fri, 03/29/2019 - 08:34
ammk TTV Dhinakaran lok sabha election 2019 election commision புதிய சின்னம் தேர்தல் களம் தேர்தல் செய்திகள் அரசியல் தமிழகம்

English Title

gift pack emblem alloted for ammk candidates by election commission

News Order

0

Ticker

0 
தூத்துக்குடி தொகுதி

தமிழிசையால் தூத்துக்குடியில் போட்டியிட இருந்த இயக்குனர் கௌதமன் திடீர் வாபஸ்

மக்களவைத் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக  வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த இயக்குனர் கௌதமன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.


கட்சி விளம்பரங்கள்

டிஜிட்டல் இந்தியாவை நம்பும் பாஜக - முகநூலில் செய்த விளம்பரங்களுக்கு ஆன செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?

சமூக வலைதளமான முகநூலில் அரசியல் கட்சிகள் இதுவரை சுமார் ரூ.8 கோடி செலவிட்டு விளம்பரம் செய்துள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரச்சாரம்

இது அட்டகாசப் புலி, இது அட்ராக்ட் பண்ற புலி என டி.ஆர் பாணியில் மோடியைப் புகழ்ந்த அதிமுக அமைச்சர் 

இந்தியாவிற்கு பிரச்சனை என்றால் மோடி ஸ்டண்ட் மாஸ்டராக மாறி நாட்டை காப்பாற்றுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 


மக்களவைத் தேர்தல்

வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவு - வாபஸ் பெற நாளை கடைசி நாள்

தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நிறைவடைந்த...


கனிமொழி

ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கனிமொழி, வைரலாகும் வீடியோ - அதிமுக புகார்

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தன்னை ஆரத்தி எடுக்குப்பவர்களுக்கு கனிமொழி பணத்தை வாரி இரைப்பதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தமிழிசை சௌந்தரராஜன்

தமிழிசை சௌந்தரராஜனின் வேட்புமனு பரிசீலனை ஒத்தி வைப்பு - என்ன காரணம் தெரியுமா ?

தூத்துக்குடியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு பரிசீலனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Election

39 தொகுதிகள் ;1237 வேட்புமனுக்கள் - நேற்றுடன் முடிந்த வேட்பு மனுத் தாக்கல்

நாட்டின்  17 - ஆவது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 - ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்க இருக்கிறது.


தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு

தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கு - ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.