தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடக் கோரி, அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடக் கோரி, அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பட்டியல் இனத்தை சேர்ந்த 7 உட்பிரிவுகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடக் கோரி, அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அந்த கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். அப்போது, பட்டியல் இனத்தில் இருந்து தங்களை வெளியேற்றக் கோரியும், 7 உட்பிரிவுகளை இணைந்து தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடக் கோரி, அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் தேவேந்திர குல வேளாளர் குறித்த அரசாணை வெளியிட வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் நடந்த இந்த போராட்டத்தில் அந்த கட்சியின் மகளிரணி செயலாளர் நளினி சாந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொணடனர். தொடர்ந்து, பங்களா மேட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நேரு சிலை வந்தடைந்த அவர்கள், தங்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.