விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், வியாபாரிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் நகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் விடுத்த அழைப்பை ஏற்று ஏராளமான கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலம், திருப்பத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி எம்எல்ஏ-க்கள் நல்லதம்பி, வில்வநாதன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில், 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, போலீசார் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பேருந்து நிலையம் பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் அளுக்குளி, நம்பியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்எல்ஏ ஆண்டி அம்பலம் தலைமையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்..

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழ்நாடு- பாண்டிச்சேரி மாநில வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் துணை தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.