“தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் திமுக” ஸ்டாலினுக்கு முக்கிய புள்ளிகளின் வாழ்த்து!

 

“தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் திமுக” ஸ்டாலினுக்கு முக்கிய புள்ளிகளின் வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக 156 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் அதிமுக 77 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட திமுக வெற்றி உறுதியான நிலையில் திமுகவினர் தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி, அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்து மட்டுமே வகித்து வந்த திமுக தற்போது ஆளுங்கட்சியாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக அரியணையை அலங்கரிக்க போவதும் அக்கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.

“தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் திமுக” ஸ்டாலினுக்கு முக்கிய புள்ளிகளின் வாழ்த்து!

இருப்பினும் தேர்தல் வெற்றி என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் மற்ற மாநில அரசியல் தலைவர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்