போலியோ சொட்டு மருந்து முகாம் : துவக்கி வைத்தார் முதல்வர்!

 

போலியோ சொட்டு மருந்து முகாம் : துவக்கி வைத்தார் முதல்வர்!

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட இடங்களில் மொத்தமாக 43,051 முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

போலியோ சொட்டு மருந்து முகாம் : துவக்கி வைத்தார் முதல்வர்!

அதன் படி, இன்று காலை 7 மணி முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடங்கியிருக்கின்றன. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்று மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும். விடுபட்ட குழந்தைகளை கண்டறிய சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. சொட்டு மருந்து மையங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா அறிகுறி இருக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்படவில்லை. அதே போல, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்காக நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்து முகாம் : துவக்கி வைத்தார் முதல்வர்!

இந்த நிலையில், தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.