விருது கோப்பையை முதல்வரிடம் காட்டி மகிழ்ந்த போலீசார் #Top10PoliceStation

 

விருது கோப்பையை முதல்வரிடம் காட்டி மகிழ்ந்த போலீசார் #Top10PoliceStation

இந்தியாவின் சிறந்த 10 காவல்நிலையங்களின் பட்டியலில் சேலம் மாவட்டம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் 2வது இடத்தில் உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டும் முதல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது மத்திய அரசு.

2017ம் ஆண்டில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையமும், 2018ல் தேனி மாவட்டத்தின் பெரியகுளம் காவல் நிலையமும், 2019ல் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையமும் இந்த டாப் டென் பட்டியலில் இடபெற்றிருந்த நிலையில் 2020ம் ஆண்டில் சூரமங்கலம் 2வது இடத்தை பிடித்திருக்கிறது.

விருது கோப்பையை முதல்வரிடம் காட்டி மகிழ்ந்த போலீசார் #Top10PoliceStation

சேலம் மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வில் இருந்த முதல்வரிடம், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு கிடைத்த விருதினை முதல்வரிடன் காட்டினர்கள் சூரங்கமலம் போலீசார். சேலம் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ஆவர்கள் விருதினை காட்டியபோது, முதல்வர் வாழ்த்தினர்.

விருது கோப்பையை முதல்வரிடம் காட்டி மகிழ்ந்த போலீசார் #Top10PoliceStation

பின்னர் செய்தியாளர்களிடம் பேசி்ய முதல்வர், ’’அகில இந்திய அளவில் சூரமங்கலம் காவல்நிலையம் இரண்டாவது பிடித்துள்ளது மகிழ்ச்சிகரமான செய்தி’’ என்று தெரிவித்தார்.

மேலும், முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்திலும், இந்தியாவில் மிகச் சிறப்பாகச் செயல்படும் Top10PoliceStation பட்டியலில் சேலம் மாவட்டம்- சூரமங்கலம் காவல்நிலையம் 2-வது இடம் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தேசிய அளவில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திய சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு எனது பாராட்டுக்கள்!