ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு!

 

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு!

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவின் அமைப்புசெயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் புகார் அளித்தார்.

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை மனு!

அந்த புகாரின் பேரில் கடந்த 23 ஆம் தேதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மே 31 ஆம் தேதி வரை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று நீதிபதி நிர்மல்குமார் தலைமையில் விசாரிக்கப்பட உள்ளது.