பெண்களுக்கு பாலியல் தொல்லை : காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு கொடுத்த திருச்சி டிஐஜி

பெண்களுக்கு பாலியல் தொல்லை : காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு கொடுத்த திருச்சி டிஐஜி

திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் மணிவண்ணன். இவர் இதற்கு முன்பு பணிபுரிந்து வந்த இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் இவர் பெண் காவலர்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்திருக்கின்றன.

பெண்களுக்கு பாலியல் தொல்லை : காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு கொடுத்த திருச்சி டிஐஜி

இதையடுத்து பொன்மலை காவல் நிலைய ஆய்வாளராக இவர் பணிபுரிந்து வந்த போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு படிக்க வந்த இலங்கை பெண்ணிடம் விசா தொடர்பான விசாரணையின் போது தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அவர் திருச்சியில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பெரம்பலூரில் பணியாற்றிய போது பெண்களிடம் நள்ளிரவு 12 மணிக்கு தொடர்புகொண்டு விசாரணை என்ற பெயரில் பாலியல் அச்சுறுத்தல் தந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீண்டும் திருச்சியில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

பெண்களுக்கு பாலியல் தொல்லை : காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு கொடுத்த திருச்சி டிஐஜி

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் திருச்சி காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணனிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ள டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

பெண்களுக்கு பாலியல் தொல்லை : காவல் ஆய்வாளருக்கு கட்டாய ஓய்வு கொடுத்த திருச்சி டிஐஜி

இந்நிலையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு கட்டாய பணி ஓய்வில் செல்ல பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதற்கான நகலை அவர் மணிவண்ணனிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்த காவல் ஆய்வாளர் மணிவண்ணன் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.