‘ஜாமீனில் வெளியே வந்த காவல் ஆய்வாளர் தற்கொலை’ மனைவி கொலை: அதிர்ச்சி சம்பவம்!

‘ஜாமீனில் வெளியே வந்த காவல் ஆய்வாளர் தற்கொலை’ மனைவி கொலை: அதிர்ச்சி சம்பவம்!

லஞ்சம் பெற்ற வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வந்த காவல் ஆய்வாளர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜாமீனில் வெளியே வந்த காவல் ஆய்வாளர் தற்கொலை’ மனைவி கொலை: அதிர்ச்சி சம்பவம்!

தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியில் வசித்து வந்த பெருமாள்பாண்டி, மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அரசு மருத்துவர் ஒருவரை விடுவிக்க இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய மதுரை லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றம், பெருமாள்பாண்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து பெருமாள்பாண்டி, ஜாமீனில் வெளியே வந்தார்.

‘ஜாமீனில் வெளியே வந்த காவல் ஆய்வாளர் தற்கொலை’ மனைவி கொலை: அதிர்ச்சி சம்பவம்!

இந்த நிலையில், மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள தனது வீட்டில் பெருமாள்பாண்டி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவியும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

‘ஜாமீனில் வெளியே வந்த காவல் ஆய்வாளர் தற்கொலை’ மனைவி கொலை: அதிர்ச்சி சம்பவம்!

இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், ஜாமீனில் வெளியே வந்த பெருமாள்பாண்டி மனைவி உமா மீனாட்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அப்போது மீனாட்சியை சுத்தியால் தாக்கியதால் அவர் உயிரிழந்ததும் மன உளைச்சலில் தானும் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. அதனிடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.