கிராம தலைவர் தேர்தலில் வெற்றி.. குஷியில் வெற்றி ஊர்வலம் நடத்திய புதிய தலைவரை வலை விரித்து தேடும் போலீசார்

கிராம தலைவர் தேர்தலில் வெற்றி.. குஷியில் வெற்றி ஊர்வலம் நடத்திய புதிய தலைவரை வலை விரித்து தேடும் போலீசார்

உத்தர பிரதேசத்தில் கிராம தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் வெற்றி ஊர்வலம் நடத்திய நபரை போலீசார் வலை விரித்து தேடி வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தொற்றுநோயை கருத்தி கொண்டு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வெற்றி ஊர்வலங்களை நடத்த உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தடை விதித்து இருந்தன. இந்த சூழ்நிலையில், அமேதி மாவட்டம் ராம்கஞ்ச் தானாவின் மங்ரா கிராமத்தின் தலைவர் தேர்தலில் இம்ரான் கான் என்பவர் வெற்றி பெற்றார்.

கிராம தலைவர் தேர்தலில் வெற்றி.. குஷியில் வெற்றி ஊர்வலம் நடத்திய புதிய தலைவரை வலை விரித்து தேடும் போலீசார்
தேர்தல் ஆணையம்

இதனையடுத்து, உச்ச நீதி மன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி தனது ஆதரவாளர்களுடன் வெற்றி ஊர்வலத்தை நடத்தினார். இந்த ஊர்வலத்தை வீடியா எடுத்து அதன் பின்னணியில் பாகிஸ்தான் பாடல் ஒலிக்கும் வகையில் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அப்படியே போலீசாரின் கவனத்துக்கும் சென்றது.

கிராம தலைவர் தேர்தலில் வெற்றி.. குஷியில் வெற்றி ஊர்வலம் நடத்திய புதிய தலைவரை வலை விரித்து தேடும் போலீசார்
எப்.ஐ.ஆர்.

இதனையடுத்து, கோவிட் தொற்றுநோய்களின் போது வெற்றி ஊர்வலத்தை நடத்தியதற்காகவும், மத நல்லிணக்கத்த சீர்குலத்ததாகவும் இம்ரான் கான் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் பகூறுகையில், இந்த வெற்றி ஊர்வலத்தால் கிராம மக்கள் கோபமடைந்தனர். இம்ரான் கான் தலைமறைவாக உள்ளார் அவரை தேடும் பணி நடந்து வருகின்றன என தெரிவித்தார்.