போக்குவரத்துக்கு இடையூறு: டி.எஸ்.பி வாகனத்திற்கு அபராதம் விதித்த போலீசார்!

 

போக்குவரத்துக்கு இடையூறு: டி.எஸ்.பி வாகனத்திற்கு அபராதம் விதித்த போலீசார்!

மதுரையில் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த டி.எஸ்.பி வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை, கீழ ஆவணி மூல வீதி பகுதியில் தேனி மாவட்டட சமூக நீதி தீண்டாமை தடுப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வாகனம் வெகு நேரமாக நின்று கொண்டிருந்துள்ளது. அந்த கார் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்ததால், பைக்குகளை தவிர பிற வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஒரு கட்டத்தில் கடுப்பான வாகன ஓட்டிகள், அந்த காரை போட்டோ எடுத்து அப்பகுதி போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போக்குவரத்துக்கு இடையூறு: டி.எஸ்.பி வாகனத்திற்கு அபராதம் விதித்த போலீசார்!

இதையடுத்து, டி.எஸ்.பி வாகனத்திற்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். டி.எஸ்.பியின் அரசு வாகனம் பழுதடைந்திருந்ததால் ஓட்டுநர் அதனை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பணிமனைக்கு கொண்டு வந்ததாகவும், பழுது செய்யப்பட்ட பிறகு நிகழ்ச்சி ஒன்றிற்காக கார் ஆவணி மூல வீதி பகுதியில் நிறுத்திவிட்டு அவர் சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனத்திற்கே போலீசார் அபராதம் விதித்தது, அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.