சிறைக்குள் நடந்த சோதனை -டாய்லெட்டில் கிடந்த பொருட்கள் -அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்.

சிறைக்குள் நடந்த சோதனை -டாய்லெட்டில் கிடந்த பொருட்கள் -அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்.

ஒரு சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகள், அங்கிருந்து தப்பி செல்வதற்காக பல பொருட்களை வெளியிலிருந்து வாங்கி ,சிறையில் வைத்திருந்ததை அதிகாரிகள்  நடத்திய ரெய்டில் கண்டுபிடித்தார்கள் .

சிறைக்குள் நடந்த சோதனை -டாய்லெட்டில் கிடந்த பொருட்கள் -அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் ஆதார்வாடி சிறையில் பல்வேறு குற்ற செயல் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர் .அங்கு அடிக்கடி கைதிகள் மீது புகார் வந்த வண்ணமிருந்துள்ளது .அதனால் அதிகாரிகள் அந்த சிறைக்குள் ரெய்டு நடத்த முடிவெடுத்தனர் .

அதன்படி அதிகாரிகள் ஏப்ரல் 17 ம் தேதி சிறை வளாகத்தை  பரிசோதித்தனர் .அப்போது அங்குள்ள கழிப்பறையில் ஒரு படுக்கை விரிப்பு மற்றும் எண்ணெய் கேன்கள் மற்றும் இரும்பு கம்பி மற்றும்  உலோக கைப்பிடிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.அதை பார்த்த அதிகாரிகள் அங்குள்ள கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அங்கிருந்த நான்கு கைதிகள் அங்கிருந்து தப்பி செல்ல போட்ட திட்டம் அம்பலமானது .அவர்கள் அந்த பொருட்களை பயன்படுத்தி அந்த டாய்லெட் ஜன்னலை உடைத்துக்கொண்டு அதன் வழியாக தப்பி செல்ல திட்டமிட்டிருந்தனர் .இந்த சதி திட்டத்தை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டார்கள் .அதனால் அந்த நான்கு கைதிகள் மீதும் அதிகாரிகள் கடக்பாடா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர், மேலும் விசாரணை நடந்து வருகிறது.

சிறைக்குள் நடந்த சோதனை -டாய்லெட்டில் கிடந்த பொருட்கள் -அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்.