ஊரடங்கை மீறி காய்கறி விற்ற சிறுவனை அடித்துக் கொன்ற காவலர்கள் சஸ்பெண்ட்!

 

ஊரடங்கை மீறி காய்கறி விற்ற சிறுவனை அடித்துக் கொன்ற காவலர்கள் சஸ்பெண்ட்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த வண்ணமே இருந்தது. இதனால் பரவலைக் கட்டுப்படுத்த சிறுசிறு தளர்வுகளுடன் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சூழலில் உன்னவ் மாவட்டத்திலுள்ள சிறு கிராமத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் நேற்று தனது வீட்டுக்கு வெளியே காய்கறிகள் விற்பனை செய்துள்ளான். இதைப் பார்த்த இரு காவல் துறையினரும் ஒரு ஊர்க்காவல் படை காவலரும் அச்சிறுவன் விதிகளை மீறிவிட்டதாகக் கூறி கடுமையாக தாக்கினர்.

ஊரடங்கை மீறி காய்கறி விற்ற சிறுவனை அடித்துக் கொன்ற காவலர்கள் சஸ்பெண்ட்!

அத்தோடு விடாமல் அச்சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கேயும் லத்தியால் மிகக் கொடூரமான வகையில் அடித்துள்ளனர். அவர்களின் அடியால் நினைவிழந்து போயுள்ளான் அச்சிறுவன். இதையடுத்து அவனை போலீஸார் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்துவி்ட்டதாகக் கூறியுள்ளார். சிறுவன் உயிரிழந்த விவகாரம் குடும்பத்தினருக்குத் தெரிந்தவுடன் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊரடங்கை மீறி காய்கறி விற்ற சிறுவனை அடித்துக் கொன்ற காவலர்கள் சஸ்பெண்ட்!

விவகாரம் பெரிதாகவே காவல் உயர் அதிகாரிகள் வந்து தலையிட்டு பொதுமக்களையும், சிறுவனின் குடும்பத்தினரையும் சமாதானம் செய்தனர். சிறுவனைக் கொலைசெய்த குறிப்பிட்ட காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், சிறுவனை தாக்கிய தலைமைக் காவலர் விஜய் சவுத்ரி, ஊர்க்காவல் படை வீரர் சத்யபிரகாஷ், மற்றுமொரு காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.