‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்’ தஞ்சையில் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி!

‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்’ தஞ்சையில் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி!

மக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் விதமாக தஞ்சையில் காவலர்கள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.

தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழா நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, காவலர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். தஞ்சை கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் இந்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, ராமநாதன் ரவுண்டானா, ரயில்வே பாலம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது.

‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்’ தஞ்சையில் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி!

அதில் ஆயுதப்படை காவலர்கள்,போக்குவரத்து காவலர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீசார் பங்கேற்றனர். பேரணியில், ‘செல்போன் பேசிக் கொண்டும் மது அருந்தி விட்டும் வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இரண்டு பேருமே ஹெல்மெட் போட வேண்டும், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும்’ உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

‘ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்’ தஞ்சையில் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி!

மேலும், ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகனஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.