“விதவைகளை வளைத்து ,டைவர்ஸ் ஆனவர்களை டபாய்த்து …”.உஷார்! திருமண வெப்சைட் மூலம் தெருவுக்கு வந்த பல பெண்களின் வாழ்க்கை..

“விதவைகளை வளைத்து ,டைவர்ஸ் ஆனவர்களை டபாய்த்து …”.உஷார்! திருமண வெப்சைட் மூலம் தெருவுக்கு வந்த பல பெண்களின் வாழ்க்கை..

ஒரு மோசடி நபர் பல பெண்களை திருமண வெப்சைட்டில் பணக்காரர் என ஏமாற்றி ,பணத்தை ஆட்டைய போட்ட விஷயம் தெரிந்து பல பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .
ஹரியானாவில் குருகிராமில் வசிக்கும் ஒரு முடித் என்ற 34 வயது நபர் பல திருமண வெப்சைட்டுகளில் தான் மிகப்பெரிய கோடீஸ்வரன் என்று தன்னுடைய போட்டோவை போட்டு பெண் தேடுவார் .திருமண வெப்சைட் காரர்களும் தங்களுக்கு கமிஷன் வந்தால் போதுமென்று அவரை பற்றி சரியாக விசாரிக்காமல் அவர் கொடுத்த விவரங்களை பதிவிட்டு பெண் தேடுவார்கள் .

“விதவைகளை வளைத்து ,டைவர்ஸ் ஆனவர்களை டபாய்த்து …”.உஷார்! திருமண வெப்சைட் மூலம் தெருவுக்கு வந்த பல பெண்களின் வாழ்க்கை..
இப்படி அவரின் கோடீஸ்வர வேஷத்தை நம்பி ஏமாந்த பெண்கள் பலர் .அதில் அவர் குறிப்பாக விதவைகள் மற்றும் விவகாரத்தான பெண்களைத்தான் குறி வைப்பார் .அப்படி ஒரு விதவைப்பெண் அவரின் வேஷத்தை கண்டு உண்மையென நம்பி தொடர்பு கொண்டு பேசினார் .பிறகு அந்த நபர் தன்னை ஒரு தொழிலதிபராக காட்டிக்கொண்டு அப்பெண்ணிடம் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் காட்டியுள்ளார் .பிறகு அவர்கள் இருவரும் வாட்ஸ்அப், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மூலம் உரையாடல்களை நடத்தினர்.
பிறகு அவர் அந்த பெண்ணிடம் கொஞ்சம் கடன் கேட்டார் ,உடனே அந்த பெண் அவர் கேட்ட சிறிய தொகையை கொடுத்தார் .உடனே அந்த கடனை திருப்பி செலுத்திய அவர் பிறகு பெரிய தொகையாக கேட்டார் ,உடனே அவர் கேட்ட அந்த 17 லட்ச ரூபாயை அவர் கொடுத்துள்ளார் .அதற்க்கு பிறகு அந்த நபரை அந்த பெண் தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை .

“விதவைகளை வளைத்து ,டைவர்ஸ் ஆனவர்களை டபாய்த்து …”.உஷார்! திருமண வெப்சைட் மூலம் தெருவுக்கு வந்த பல பெண்களின் வாழ்க்கை..
இதனால் அந்த பெண் தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்து டெல்லி போலீசில் புகார் தந்தார் .டெல்லி போலீஸ் தீவிர விசாரணை நடத்தி கடந்த ஞாயிற்று கிழமை அவரை கைது செய்தனர் .பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் பல ஊர்களில் மக்களை ஏமாற்ற முதித் சாவ்லா, அஞ்சித் சாவ்லா, மோஹித் சாவ்லா, அமர்ஜீத் சிங் பிரார் போன்ற பல்வேறு பெயர்களைக் கொண்டு பல பெண்களை ஏமாற்றிய விவரம் தெரிந்து அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர் .