வேல் யாத்திரை: எல்.முருகனுடன் 5 வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி!

வேல் யாத்திரை: எல்.முருகனுடன் 5 வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி!

சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் எல்.முருகனுடன் 5 வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்கியுள்னர்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. கொரோனாவை காரணம் காட்டி யாத்திரைக்கு அரசு தடை விதித்திருப்பினும், தடை மீறி யாத்திரையை நடத்த பாஜக முடிவெடுத்தது.

வேல் யாத்திரை: எல்.முருகனுடன் 5 வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி!

அதன் படி, திருத்தணியில் தொடங்க உள்ள யாத்திரையில் பங்கேற்க எல்.முருகன் இன்று காலை புறப்பட்டு சென்றார். அவருடன் வி.பி.துரைசாமி, கருநகராஜன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் செல்கின்றனர். அப்போது பேசிய அவர், கடவுளை வழிபடுவது எனது உரிமை என்றும் டவுள் முருகனுக்கு யார் யார் எதிராக இருக்கிறார்களோ அவர்களின் முகத்திரையை கிழிக்க யாத்திரை நடத்துகிறோம் என்றும் கூறியிருந்தார்.

வேல் யாத்திரை: எல்.முருகனுடன் 5 வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி!

இந்த நிலையில், தடையை மீறி யாத்திரை நடைபெறுவதால் எல்.முருகனின் வாகனத்துடன் சேர்த்து 5 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி யாத்திரை நடக்கும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.