பாமகவின் அதிரடிகள்: கூட்டணி மாற்றமா… தொகுதி பேரமா?

 

பாமகவின் அதிரடிகள்:  கூட்டணி மாற்றமா… தொகுதி பேரமா?

பாமக தற்போது அதிரடியான சில நிலைபாடுகளை எடுத்து வருகிறது. அது எந்தளவு தமிழக அரசியலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனப் பார்ப்போம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. அதனால் திமுக – அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளை உறுதிப்படுத்திக் கொள்ள கடும் முயற்சிகள் எடுத்து வருகிறது.

பாமகவின் அதிரடிகள்:  கூட்டணி மாற்றமா… தொகுதி பேரமா?

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே பெரிய மோதல் இல்லை. ஆனால், அதிமுகவின் கூட்டணிக்குள் சமீபமாக சில சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. அக்டோபர் முதல்வாரத்தில் சில சமரசங்கள் நடைபெற்று, எடப்பாடி பழனிச்சாமியே முதல்வர் வேட்பாளர் என பன்னீர்செல்வமே அறிவித்தார். அதனால், கட்சியின் மிகப் பெரிய சிக்கல் தீர்ந்தது என நினைத்தார்கள். ஆனால், சிக்கலே அதிலிருந்து தற்போது தொடங்கியிருக்கிறது.

பாஜக எல்.முருகன், அண்ணாமலை ஐபிஎஸ், குஷ்பு உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளரா எனக் கேட்ட கேள்விக்கு, அதை பாஜகதான் முடிவெடுக்கும் என்றனர்.

பாஜக மேலிட பொறுப்பாளர் ரவியோ, தேர்தல் முடிந்தபிறகுதான் முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடி முடிவு செய்யும் என்று சொல்லிவிட்டார். இது சிக்கலை இன்னும் அதிகப்படுத்தியது

பாமகவின் அதிரடிகள்:  கூட்டணி மாற்றமா… தொகுதி பேரமா?

அதிமுகவின்  கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்து அதிக வாக்கு வங்கி கொண்டுள்ள பாமகவின் மூத்த தலைவர் ஜி.கே. மணி, ‘அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி. கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை ராமதாஸ் அறிவிப்பார்’ என்று கூறியிருப்பது எரியும் தீயில் எண்ணெய்யை விட்டது போலாகி விட்டது.

முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் பாமகவும் தனித்த நிலைப்பாடு எடுப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. மேலும், இன்று பாமக சார்பில் நடந்த புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 8-ம் தீர்மானமாக எட்டு வழிச்சாலை திட்டம் கைவிட வேண்டும் என்று அழுத்தமாகக் கூறப்பட்டிருக்கிறது.

எட்டு வழிச்சாலை அமைத்தல் என்பது பாஜகவுக்கு மட்டுமல்ல, அதிமுகவின் நிலைபாடும்கூட. இந்நிலையில் எட்டு வழிச்சாலையை நேரடியாக எதிர்ப்பது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை அளிக்கும்.

பாமகவின் அதிரடிகள்:  கூட்டணி மாற்றமா… தொகுதி பேரமா?

முதல்வர் வேட்பாளர் சர்ச்சை + எட்டு வழிச்சாலை திட்டம் கைவிடல் எனும் இரட்டை ஆயுதத்தை பாமக தூக்கியிருப்பதன் பின்னணியில் இரு விஷயங்கள் அலசப்படுகின்றன. ஒன்று,, இதை மையமாக வைத்து பாமக அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளை வலியுறுத்துவது. அவற்றில் பெரும்பாலானவற்றை வடதமிழ்நாட்டுப் பகுதிகளில் பெறுவது.

இரண்டாவது விஷயம், திமுக கூட்டணிக்கு பாமக தரப்பில் எப்போதும் ஒரு முயற்சி நடைபெறும். அப்படி இப்போதும் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. அதிமுகவில் அதிக சீட் வாங்கி குறைவாக வெல்வதை விடவும், திமுகவில் குறைவான எண்ணிக்கை சீட்டுகள் வாங்கி அதிக தொகுதி வெல்லலாம் என்று பாமகவின் ஒரு தரப்பு கூறுகிறது.