“தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது” – பாமக தகவல்!!

 

“தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது” – பாமக தகவல்!!

பாமக தனித்து போட்டியிடுவது அரசியல் ரீதியாக பெரிய விஷயம் இல்லை என்று பாமக செய்தி தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.

“தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது” – பாமக தகவல்!!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளது.சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை; நம்மால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைந்தன, அவர்களால் நமக்கு எந்த பலனும் இல்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால் பாமக, கூட்டணியில் இருந்து வெளியேறியதால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமாரும், கூட்டணி என்பது சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலில் தான் எடுபடும், பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை என்று செல்லூர் ராஜூவும் பதிலடி கொடுத்துள்ளனர்.

“தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது” – பாமக தகவல்!!

இந்நிலையில் பாமக செய்தி தொடர்பாளர் பாலு செய்தியாளர்களை சந்தித்த நிலையில், “பாமக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே நிர்வாகிகளின் விருப்பம்; உடனடியாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியது இருப்பதால், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் இல்லை, அதனால் தனித்துப் போட்டியிட முடிவு. அதிமுக உடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்ந்து இருக்கிறது. பாமக தனித்து போட்டியிடுவது அரசியல் ரீதியாக பெரிய விஷயம் இல்லை” என்று என்றார்.