“துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணைபோகக்கூடாது” : ராமதாஸ் வேண்டுகோள்!

 

“துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணைபோகக்கூடாது” : ராமதாஸ் வேண்டுகோள்!

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடித்து துரோக வரலாற்றுக்கு துணைபோகாதீர்கள் என்று விஜய் சேதுபதிக்கு ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதிக்கு எதிரான குரல்கள் வலுவாக கேட்டு வருகிறது. காரணம் அவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க கூடாது என்பதே பலரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. 800 என்ற படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ள நிலையில் திரைபிரபலங்கள் , அரசியல் தலைவர்களின் எதிர்ப்பால் திணறி வருகிறார்.

“துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணைபோகக்கூடாது” : ராமதாஸ் வேண்டுகோள்!

இந்நிலையில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு; அது திருத்தப்பட வேண்டும்.

“துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணைபோகக்கூடாது” : ராமதாஸ் வேண்டுகோள்!

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இராஜபக்சே குடும்பத்தின் புகழ்ந்து பேசுவது தான் அவரின் முழு நேரத் தொழில் ஆகும். இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் ஆளுனராக முத்தையா முரளிதரனை நியமிக்கலாமா? என்று இராஜபக்சே சகோதரர்கள் பரிசீலிக்கும் அளவுக்கு அவர்களின் விசுவாசியாக இருந்தவர் முரளிதரன். ஈழத்தமிழர்களுக்கு முரளிதரன் செய்த துரோகங்களுக்கு இந்த உதாரணங்களே போதுமானவை. உலகில் உள்ள விளையாட்டு வீரர்களில் பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றவர்கள்; பன்னாட்டு போட்டிகளில் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியவர்கள். ஆனால், முரளிதரன் இனப்படுகொலை செய்தவர்களுக்கும், போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு துணை நிற்பவர். இந்த உண்மைகள் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் இருக்கலாம்; அதனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

“துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணைபோகக்கூடாது” : ராமதாஸ் வேண்டுகோள்!

முத்தையா முரளிதரனின் விளையாட்டுச் சாதனையை சித்தரிக்கும் படத்தில் மட்டும் தான் நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்படலாம். உண்மையில் 800 திரைப்படம் முரளியின் சாதனைகளைப் பற்றி மட்டும் பேசும் படமாக இருக்காது; அவர் மூலமாக இராஜபக்சே சகோதரர்களை உத்தமர்களாக சித்தரிக்கும் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும் என்பது தான் எங்களின் ஐயம்.

“துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணைபோகக்கூடாது” : ராமதாஸ் வேண்டுகோள்!


விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், படைப்புச்சுதந்திரம் என்பது தாயை இழிவுபடுத்தி பேயை போற்றுவதற்கு பயன்படுத்தப்படக்கூடாது. நான் திரைப்படங்களை அதிக அளவில் பார்ப்பவன் அல்ல. எனினும், நடிகர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை என்ற திரைப்படத்தை அப்படக்குழு அழைப்பை ஏற்று பார்த்தேன். அந்தப் படத்தில் விஜய் சேதுபதியை மக்கள் மருத்துவராகவே பார்த்தேன்; கிராமப்புற ஏழைகளுக்கு அவர் வாஞ்சையுடன் மருத்துவம் அளிக்கும் காட்சிகளில் நான் அவருக்குள் என்னைப் பார்த்தேன். ஆனால், முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அவரை மட்டைப்பந்து வீரராக எவரும் பார்க்க மாட்டார்கள்; மாறாக துரோகத்தின் சின்னமாகவே பார்ப்பார்கள்.

800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப்போவதில்லை. அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார்; மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.