வன்னியர் இடஒதுக்கீடு : முதல்வரை இன்று சந்திக்கிறார் ராமதாஸ்

 

வன்னியர் இடஒதுக்கீடு : முதல்வரை இன்று சந்திக்கிறார்  ராமதாஸ்

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பழனிசாமியை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சந்திக்கிறார்.

வன்னியர் இடஒதுக்கீடு : முதல்வரை இன்று சந்திக்கிறார்  ராமதாஸ்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க நிபந்தனை விதித்துள்ளது. அதில், வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாமக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசி வருகின்றனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

வன்னியர் இடஒதுக்கீடு : முதல்வரை இன்று சந்திக்கிறார்  ராமதாஸ்

இந்நிலையில் முதல்வர் பழனிசாமியை இன்று மாலை 4 மணிக்கு சந்தித்து பேசுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் ராமதாஸ். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% உள்இடஒதுக்கீடு வழங்க பாமக வலியுறுத்தி வருகிறது. வன்னியர் இடஒதுக்கீடு, தொகுதி பங்கீடு தொடர்பான அதிமுக – பாமக இடையே பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் இதுதொடர்பாக ராமதாஸ் நேரடியாகவே முதல்வரை சந்தித்து பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.