ரயில் மீது கல்வீச்சு, மறியல் : பாமகவினர் மீது வழக்குப்பதிவு!

 

ரயில் மீது கல்வீச்சு, மறியல் : பாமகவினர் மீது வழக்குப்பதிவு!

சென்னை அருகே பெருங்களத்தூரில் கற்கள் வீசி ரயிலை தாக்கிய புகாரில் பாமகவினர் 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு கோரி சென்னையில் நேற்று பாமகவினர் போராட்டம் நடத்தினர். மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை எல்லைக்குள் நுழைய முயன்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் பெருங்களத்தூர் தடம் வழியே சென்ற ரயில் மீது கற்களை வீசிய பாமகவினர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தவாறு போராட்டம் நடத்தினர். இதனால் சென்னைக்கு வரும் நுழைவாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ரயில் மீது கல்வீச்சு, மறியல் : பாமகவினர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் ரயில் மீது கற்களை வீசிய புகாரில் பாமகவினர் 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . அத்துடன் ஜிஎஸ்டி சாலை, இரணியம்மன் கோயில், பம்மல் உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1,648 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் மீது கல்வீச்சு, மறியல் : பாமகவினர் மீது வழக்குப்பதிவு!

இதைத்தொடர்ந்து வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் ஓட்டம் பிடித்தார் அன்புமணி. அவருடன் வந்த ஆதரவாளர்கள் செய்தியாளர் மிரட்டும் தோணியில் கை காண்பித்து விட்டு சென்றதால் அங்கு பதற்றம் நிலவியது.