வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, மாநகராட்சி- நகராட்சி அலுவலகங்களில் பாமகவினர் மனு

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, மாநகராட்சி- நகராட்சி அலுவலகங்களில் பாமகவினர் மனு

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக சார்பில் இன்று 5ஆம் கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, மாநகராட்சி- நகராட்சி அலுவலகங்களில் பாமகவினர் மனு

கோவையில் மாநகர் மாவட்ட பாமக சார்பில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநகராட்சி உதவி ஆணையர் மோகன சுந்தரியிடம் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக மாநகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை ராஜ், தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அப்போது பாமகவின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால், வேறு வடிவிலான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, மாநகராட்சி- நகராட்சி அலுவலகங்களில் பாமகவினர் மனு

திருப்பத்தூரில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் விஜயகுமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று நகராட்சி ஆணையர் சத்தியநாதனிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர். அதேபோல், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் ராமஜெயத்திடம், 20 சதவீத இடஒதுக்கீடு கோரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவினை அக்கட்சியின் துணைத்தலைவர் பொன்னுசாமி தலைமையில் வழங்கினர்.

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, மாநகராட்சி- நகராட்சி அலுவலகங்களில் பாமகவினர் மனு

தஞ்சையில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். முன்னதாக தஞ்சை ரயில் நிலையம் அருகே நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் துணை பொதுசெயலாளர் மாயவரம் அய்யப்பன் தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டு, 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.