20% உள் இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில், கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு

20% உள் இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில், கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு

வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர், கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

20% உள் இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில், கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு

திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் கிராமத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்த கட்சியின் மாநில துணை பொதுச்செயலாலர் பாலயோகி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக சென்று, கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தியிடம், 20 சதவீத உள் ஒதுக்கீடு கோரி மனு வழங்கினர்.

20% உள் இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில், கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில், பாமக சார்பில் கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி கலந்துகொண்டு, 20% உள் இடஒதுக்கீடு கோரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்ற மனுவை கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலநதுகொண்டு,தமிழக முதலமைச்சரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

20% உள் இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில், கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு

ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் கிராமம் கனிராவுத்தர் குளம் பகுதியில் , பாமக சார்பில் கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் பொ.வை. ஆறுமுகம் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது, 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நிர்வாக அலுவலர் செந்தில் இடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.