பாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்! வெளியானது பட்டியல்

 

பாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்! வெளியானது பட்டியல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. திமுக நாளை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக நேற்றே தொகுதி பங்கீடுகள் பேச்சுவார்த்தையை நடத்தியது. பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 இடங்கள் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதேபோல் அதிமுக – தேமுதிக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாமக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாமக போட்டியிடும் தொகுதிகள் இவைதான்! வெளியானது பட்டியல்
பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக போட்டியிடும் தொகுதிகள்:

1) கும்மிடிப்பூண்டி, 2)திருத்தணி, 3)எழும்பூர், 4)செங்கல்பட்டு, 5)திருப்போரூர், 6)சோளிங்கர், 7)ஆற்காடு, 8)ஓசூர், 9)பாப்பிரெட்டிப்பட்டி, 10)பென்னாகரம், 11)ஆரணி, 12)கலசப்பாக்கம், 13)அணைக்கட்டு, 14)திண்டிவனம், 15)விக்கிரவாண்டி, 16)சங்கராபுரம், 17)மேட்டூர், 18)வீரபாண்டி, 19)குன்னம், 20)ஜெயங்கொண்டம், 21)பண்ருட்டி, 22)நெய்வேலி, 23)காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட இடங்களில் பாமக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.