புத்தகங்களில் சாதி பெயர்கள் நீக்கம்… கொதித்தெழுந்த ராமதாஸ்

 

புத்தகங்களில் சாதி பெயர்கள் நீக்கம்… கொதித்தெழுந்த ராமதாஸ்

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்களை அச்சிடுகிறது. சமீபத்தில் இதன் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அரசு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. தலைவராகப் பொறுப்பேற்றது முதல் லியோனி அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார். ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தது.

புத்தகங்களில் சாதி பெயர்கள் நீக்கம்… கொதித்தெழுந்த ராமதாஸ்

இந்தச் சொல்லாடல் கடும் விமர்சனங்களை எழுப்பியது. ஆனால் அந்த வார்த்தையைப் பாடப்புத்தக்கங்களில் மாற்றுவோம் என லியோனி அதிரடியாக அறிவித்தார். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளின் பாடப்புத்தகங்களும் தமிழில் அச்சிட்டு வெளியிடப்படும் என்றும் கூறினார். இச்சூழலில் அடுத்தக்கட்ட நகர்வாக 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் தமிழறிஞர்களின் பெயரில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டிருக்கிறது.

புத்தகங்களில் சாதி பெயர்கள் நீக்கம்… கொதித்தெழுந்த ராமதாஸ்

மயூரம் வேதநாயகம் பிள்ளை என்பது வேதநாயகம் எனவும் உ.வே சாமிநாத அய்யர் என்பது உ.வே சாமிநாதர் எனவும் மாற்றப்பட்டுள்ளது. அதே போல நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பது ராமலிங்கம் எனவும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பது மீனாட்சி சுந்தரனார் எனவும் மாற்றப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் புத்தகங்களில் சாதி பெயர்கள் நீக்கப்பட்டே புத்தகங்கள் அச்சிடப்படும் எனவும் பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

புத்தகங்களில் சாதி பெயர்கள் நீக்கம்… கொதித்தெழுந்த ராமதாஸ்

இதற்கு பெரும்பான்மையானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்ததோடு, விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் நோக்கம் வரவேற்கத்தக்கது தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்குப் பதிலாக அறிஞர்களின் அடையாளத்தைத் தான் அழிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், “தலைவர்கள், தமிழறிஞர்களின் பெயர்களின் பின்னால் உள்ள சாதிப் பெயர்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் தேசிகர், தீக்ஷிதர் போன்ற சாதிப் பெயர்கள் தமிழ்ப் பாடநூலில் இருந்து நீக்கப்படவில்லை.

புத்தகங்களில் சாதி பெயர்கள் நீக்கம்… கொதித்தெழுந்த ராமதாஸ்
உவேசா

தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது என்பது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது. சாதிப்பெயர் அவர்களின் அடையாளம். உ.வே.சாமிநாதய்யர் என்றால் தமிழ்த்தாத்தா என்ற பெயர் நினைவுக்கு வரும்; அந்தப் பெயர் நினைவுக்கு வந்தால் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை பதிப்பித்தார் என்பது நினைவுக்கு வரும். மாறாக உ.வே.சாமிநாதர் என்றால் அதே பெயர், அதே முதலெழுத்துகளுடன் வாழ்ந்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவர் என்று கருதி வருங்கால சந்ததியினர் கடந்து சென்று விடக்கூடும்.

Facebook
நாமக்கல் கவிஞர்

இது அறிஞர்களின் அடையாளத்தை சிதைக்கும். தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதி பெயரை இட்டுக்கொள்ளும் வழக்கம் ஐம்பதாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டது. அதனால் இனிவரும் காலங்களில் உருவெடுக்கும் சாதனையாளர்கள்/ தலைவர்களின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போட வேண்டிய தேவையிருக்காது. ஏற்கனவே சாதிப் பெயர்களுடன் கூடிய தலைவர்களின் பெயர்கள் பாடநூல்களிலும், இதர ஆவணங்களிலும் அப்படியே நீடிக்க அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க ஒரே வழி சமத்துவத்தை ஏற்படுத்துவது தான். அதற்கான நடவடிக்கைகளைத் தான் அரசு விரைவுபடுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.