பாமக ‘எந்த சின்னத்தில்’ போட்டியிடுகிறது தெரியுமா?

 

பாமக ‘எந்த சின்னத்தில்’ போட்டியிடுகிறது தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தொகுதி பங்கீட்டுக்கு முன்னர், பாமகவின் 40 ஆண்டுகால கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றி வைத்தது. அதாவது, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமகவின் கோரிக்கையை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றிக் கொடுத்தது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது பாமகவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பாமக ‘எந்த சின்னத்தில்’ போட்டியிடுகிறது தெரியுமா?

அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் சீனியர் கட்சியான பாமகவுக்கு குறைவான தொகுதிகள் வழங்கப்பட்டது ஏன்? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. இதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு கொடுத்ததால் குறைவான தொகுதியை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் தொடருகிறோம் என தெரிவித்தார். இதையடுத்து, தான் போட்டியிட விரும்பும் உத்தேசப்பட்டியலை பாமக அதிமுகவிடம் கொடுத்தது.

பாமக ‘எந்த சின்னத்தில்’ போட்டியிடுகிறது தெரியுமா?

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாமகவுக்கு ‘மாம்பழம்’ சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, 23 தொகுதிகளிலும் தனது மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிடப்போவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.