Home அரசியல் பிரச்சாரத்துக்கு வைத்திருந்த 'மாம்பழ' சின்னத்தை சாப்பிட்ட பாமக தொண்டர் ; பரப்புரை கூத்துகள்!!!

பிரச்சாரத்துக்கு வைத்திருந்த ‘மாம்பழ’ சின்னத்தை சாப்பிட்ட பாமக தொண்டர் ; பரப்புரை கூத்துகள்!!!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாமக செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் , ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேளூர்(தனி), ஆத்தூர் ஆகிய 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பிரச்சாரத்துக்கு வைத்திருந்த 'மாம்பழ' சின்னத்தை சாப்பிட்ட பாமக தொண்டர் ; பரப்புரை கூத்துகள்!!!
பிரச்சாரத்துக்கு வைத்திருந்த 'மாம்பழ' சின்னத்தை சாப்பிட்ட பாமக தொண்டர் ; பரப்புரை கூத்துகள்!!!

இந்நிலையில் பூந்தமல்லி தனி தொகுதியில் பாமக வேட்பாளர் ராஜமன்னார் போட்டியிடுகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இவரது கையில் துண்டு பிரசுரம் இல்லாததால் பாமக சின்னமான மாம்பழத்தை இஸ்லாமியர் ஒருவரிடம் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்துக்கு வைத்திருந்த 'மாம்பழ' சின்னத்தை சாப்பிட்ட பாமக தொண்டர் ; பரப்புரை கூத்துகள்!!!

அதேபோல் மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்வும் இந்த பரப்புரையின் போது நிகழ்ந்துள்ளது. அதாவது இரண்டு மசூதிகளில் தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் வெளியில் வரதாமதம் ஆகியுள்ளது. இதனால் பசி தாங்க முடியாத தொண்டர் ஒருவர் ஓட்டு கேட்க வைத்திருந்த மாம்பழத்தை அங்குள்ள மர நிழலுக்கு சென்று வேக வேகமாக சாப்பிட்டுள்ளார். பிரச்சாரம் என்ற பெயரில் உடன் வரும் தொண்டர்கள் இதுபோன்ற பல பிரச்னைகளை எல்லா கட்சியிலும் சந்திக்கின்றனர்.பாமக கடந்த ஒருவாரத்திற்கு முன்பு 4 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இறுதியாக வெளியிட்டது. இருப்பினும் இன்னும் பாமக வேட்பாளர் ராஜமன்னார் துண்டு பிரசுரம் ஏதும் அச்சடிக்காதால் இத்தனை அக்கப்போரு நடந்து வருகிறது.

பிரச்சாரத்துக்கு வைத்திருந்த 'மாம்பழ' சின்னத்தை சாப்பிட்ட பாமக தொண்டர் ; பரப்புரை கூத்துகள்!!!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மிதக்கும் வரை.. வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தாய்

பெற்ற குழந்தைகளை கிணற்றுக்குள் வீசியதில் அக்குழந்தைகள் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்து உடல்கள் மேலே வந்து மிதக்கும் வரைக்கும் வெறித்து பார்த்து கொண்டிருந் திருந்கிறார். ஆட்கள் அருகே வந்ததும் தான் தற்கொலை...

2 நாட்களில் மூட்டைக்கு ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 70% கட்டுமான பணிகள் தேக்கமடைந்துள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு அழைத்து வரப்பட்டு பணி செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் பொதுமக்கள் காரணமாக சொந்த...

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்- முதல்வர் ஆலோசனை

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

12 ஆம் வகுப்பு மாணவியுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் ஆசிரியருக்கு வலைவீச்சு

திண்டுக்கல் மாவட்டம் ஆரணி அருகே 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ஆசிரியரும், அரசு ஊழியருமானவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- Advertisment -
TopTamilNews