மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது! ஐநா கூட்டத்தில் மோடி உரை

 

மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது! ஐநா கூட்டத்தில் மோடி உரை

ஐநா பொதுக்கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாததிக்கப்பட்டது.

ஐநா கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அக். 2 உலக அமைதி தினம், அதை உருவாக்கியது இந்தியா ஐநா தொடங்கியபோது இருந்ததைவிட இன்றைய உலகம் முற்றிலும் மாறுபட்ட காலத்திற்கு மாறிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபன உறுப்பினர்களில் ஒருவர் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன். மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது! ஐநா கூட்டத்தில் மோடி உரை

ஐ.நா. சபை உருவாக்கப்பட்ட நோக்கம் இந்திய சிந்தனைகளுடன் இணைந்தது. இந்த உலகத்தை நாங்கள் குடும்பமாக கருதுகிறோம், இது எங்கள் கலாசாரம். ஐ .நா. அவையில் இந்தியா அதைத்தான் எதிரொலித்திருக்கிறது. உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா பல வீரர்களை இழந்துள்ளது. இன்றைய சவால்கள் முற்றிலும் வேறுபட்டுள்ளன” எனக் கூறினார்.