கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது- பிரதமர் மோடி

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது- பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக நடைபெற்று வந்த முன்களப் பணியாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரப் போகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருத்துவ அமைப்பு அனுமதி வழங்கியது. இதனையடுத்து வரும் 16ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. முதலில் முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட இணை நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கேரளா, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களுடனும் இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது தடுப்பூசி குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் வழங்கினார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது- பிரதமர் மோடி

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே மத்திய அரசின் இலக்கு. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான வாய்ப்பு வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் 3 கோடி சுகாதார பணியாளர்கள் உள்ளனர். முதற்கட்டமாக அவர்களுக்கு தடுப்பூசி போடும் செலவை மாநில அரசு ஏற்க வேண்டியதில்லை. மத்திய அரசு ஏற்று கொள்ளும். தடுப்பூசி போடப்படுபவர்களின் விவரங்கள் கோவின் செயலியில் குறிப்பிடப்படும். தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்” எனக் கூறினார்.