“பிண அரசியல் செய்யும் மம்தா அகங்காரம் பிடித்தவர்”

 

“பிண அரசியல் செய்யும் மம்தா அகங்காரம் பிடித்தவர்”

மேற்கு வங்க அரசியல் களம் ரணகளமாக இருக்கிறது. பாஜக தரப்பில் பிரதமர் மோடி, அமித் ஷா வார்த்தைப் போர் தொடுக்க திருணாமுல் கட்சித் தலைவர் மம்தா சிங்கிளாக டீல் செய்து வருகிறார். இவர்கள் மூவருக்கும் இடையே நிலவும் போர் தொண்டர்களையும் பாதித்திருக்கிறது. இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவில் நான்கு கட்டங்களில் கடும் மோதல் உருவாகி பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

“பிண அரசியல் செய்யும் மம்தா அகங்காரம் பிடித்தவர்”

உச்சக்கட்டமாக நான்காம் கட்ட வாக்குப்பதிவில் வன்முறைகள் வெடித்து பாதுகாப்புப் படையினர் ஐந்து கட்சித் தொண்டர்களைச் சுட்டுக்கொல்லும் அளவிற்குச் சென்றுவிட்டது. இதனால் பலத்த பாதுகாப்புடன் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இது மேற்கு வங்கம் தானா என்று கேட்பது போல மிக மிக அமைதியான முறையில் வாக்குகள் பதிவாகின. இருப்பினும் பிரதமர் மோடி விடுவதாய் இல்லை. 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆறாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு அசன்சோல் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார்.

“பிண அரசியல் செய்யும் மம்தா அகங்காரம் பிடித்தவர்”

அப்போது பேசிய அவர், “ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மேற்கு வங்கம் மட்டும் பின்னால் செல்கிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காக மேற்கு வங்கத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட செயல்படுத்த மம்தா பானர்ஜி அனுமதிக்கவில்லை. அவருக்கு தான் என்ற அகங்காரம் மட்டுமே இருக்கிறது.

“பிண அரசியல் செய்யும் மம்தா அகங்காரம் பிடித்தவர்”

கூச்பெஹாரில் நடந்த வன்முறையில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களின் உடல்களை ஊர்வலமாகக் கொண்டு செல்லுமாறு கூச்பெஹார் திருணாமுல் தலைவருக்கு மம்தா தொலைபேசியில் அறிவுறுத்துகிறார். இந்த ஆடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இறந்தவர்களின் உடல்களை வைத்து அரசியல் செய்யும் நிலைக்கு மம்தா சென்றுவிட்டார். இந்தத் தேர்தலுடன் மம்தாவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். விரைவில் அவருக்கு முன்னாள் முதல்வர் பதவி கிடைத்துவிடும்” என்றார்.