பாமக தலைவர் ராமதாஸுக்கு செல்போனில் வாழ்த்து தெரிவித்த மோடி!

 

பாமக தலைவர் ராமதாஸுக்கு செல்போனில் வாழ்த்து தெரிவித்த மோடி!

83ஆவது பிறந்தநாளை கொண்டாடும் பாமக தலைவர் ராமதாஸுக்கு பிரதமர் மோடி செல்போனில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இன்று தனது 83ஆவது பிறந்தநாளை காணுகிறார். அவரது பிறந்தநாளை பாமகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

பாமக தலைவர் ராமதாஸுக்கு செல்போனில் வாழ்த்து தெரிவித்த மோடி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று முதல்வர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ராமதாஸுக்கு செல்போனில் அழைப்பு விடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

ராமதாஸின் உடல்நலம் பற்றி விசாரித்ததோடு டெல்லிக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராமதாஸுக்கு செல்போன் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.