திருக்குறளை மேற்கோள் காட்டி… யோகா தினம் பற்றி பேசிய பிரதமர் மோடி!

 

திருக்குறளை மேற்கோள் காட்டி… யோகா தினம் பற்றி பேசிய பிரதமர் மோடி!

சர்வதேச யோகா தினம் குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி ‘நோய் நாடி நோய்முதல் நாடி’ என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

ஆண்டு தோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 7ஆவது சர்வதேச யோகா தினத்தில் தான் மக்களிடம் உரையாற்றவிருப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ‘ஆரோக்கியத்திற்கு யோகா’ என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள் என்றும் உடல் மற்றும் மனநலத்தை காப்பதில் யோகா கவனம் செலுத்துகிறது என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

திருக்குறளை மேற்கோள் காட்டி… யோகா தினம் பற்றி பேசிய பிரதமர் மோடி!

இந்த நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். கொரோனா காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக இருக்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இன்னும் குறையவில்லை. யோகாவின் முக்கியத்துவமும் ஆர்வமும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் துயரமான காலகட்டத்திலும் மக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த யோகா உதவியது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க நான் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார். இதனிடையே, ‘நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார்.